News May 9, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 6, 2025
திருவள்ளூரில் வட்ட ரயில் இயக்க கோரிக்கை

திருவள்ளூர்: காஞ்சிபுரம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வட்ட பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் கோரிக்கை மனு வைத்துள்ளார். சென்ட்ரல் வழி தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர் மார்க்கமாக இயங்கி வந்த வட்ட பாதை ரயிலை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ரயில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
News July 6, 2025
திருவள்ளூர் இறைச்சி மார்க்கெட் விலை நிலவரம்

திருவள்ளூர் மார்கெட்டில் இன்று இறைச்சி விலை நிலவரம் (கிலோவில்): எலும்பில்லாத நாட்டு கோழி கிலோ ரூ.450, கோழிக்கறி கிலோ ரூ.240, ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய். 850, ஆட்டுத்தலை ரூபாய் 300, நாலு ஆட்டுக்கால்கள் ரூபாய் 400, மூளை ரூ.120, மண்ணீரல் ரூபாய் 200. பொன்னேரியில் சிக்கன் விலை கிலோ ரூபாய் 200 -க்கு விற்கப்படுகிறது.
News July 6, 2025
திருவள்ளூர் மீன் மார்க்கெட் விலை நிலவரம்

திருவள்ளூர் மின் நிலவரம் (கிலோவில்) : வஞ்சிரம் மீன் ரூ.900-1000, பண்ண மீன் கிலோ ரூ.300-350, பாறை மீன் கிலோ ரூபாய்.200-300, இறால் (சிறியது) கிலோ ரூபாய்.200, (பெரியது) ரூபாய்.300-500, நண்டு கிலோ ரூபாய்.200-300, பெரிய நண்டு ரூ.400-800, சங்கரா மீன் கிலோ ரூ.400-450, பாறை மீன் கிலோ ரூ. 200-250, மத்தி மீன் கிலோ ரூ.60, ஊடான் மீன் ரூ.300, ஏரி மடவைர ரூ.200, கட்லா ரூ.200-250, ஏரிக்கண்டை ரூ.200 க்கு விற்பனை