News January 12, 2026
திருவள்ளூர் மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தும் MP!

தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற பயிற்சிப்பட்டறை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு வரும் ஜன.25 ஆம் தேதி நடத்த உள்ளார். இதற்குமுன் பதிவு செய்வதற்காக மேல் உள்ள க்யூ ஆர்-யை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: 9445500346 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.
Similar News
News January 26, 2026
திருவள்ளூர்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. யூகோ(UCO) வங்கியில் காலியாக உள்ள 173 ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 26, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி கிராமம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிரி(39). டிரைவரான இவர், கடந்த 20ஆம் தேதி பைக்கில் பொதட்டூர் பேட்டை பஜார் தெருவில் சென்றார். அங்கிருந்து தனது கிராமத்திற்கு திரும்பிய போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தூக்கி விசப்பட்டு, படுகாயமடைந்தார் . இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜன.23 உயிரிழந்தார்.
News January 26, 2026
திருவள்ளூரில் மின்சார ரயில்கள் இயங்காது!

திருவள்ளூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.27) சென்ட்ரலிலிருந்து காலை 5:40, சூலூர்பேட்டையிலிருந்து காலை 7:50, மதியம் 12:35, நெல்லூரிலிருந்து காலை 10:20, ஆவடியிலிருந்து காலை 4:25 ஆகிய நேரங்களில் கிளம்பும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலிலிருந்து காலை 4:15, 5:00, சூலூர்பேட்டையிலிருந்து காலை 6.45, 7.25 ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் தகவலை உடனே SHARE!


