News October 28, 2025
திருவள்ளூர் மழை நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.27) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 72 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஆவடி 67 மி.மீ மழையும், திருத்தணி 18 மி.மீ மழையும், ஊத்துகோட்டை 6 மி.மீ மழையும், திருவாலங்காடு 13மி.மீ மழையும், பூவிருந்தவல்லி 30மி.மீ மழையும், ஜொமின் கொரட்டூர் 27 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் இன்றும் மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
புயல் முன்னெச்சரிக்கை–மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக்.28) பாக்கம் பெரிய ஏரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் நீர்வரத்து தடையில்லாமல் இருக்க கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
News October 28, 2025
திருவள்ளூர்: மோந்தா புயல்-உதவி எண் அறிவிப்பு

வங்க கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயலால், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க எம்பி சசிகாந்த் செந்தில் உதவி எண்களை அறிவித்துள்ளார். (உதவி எண் – 94455 00346 / +91 44-27660991) இதில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளார்.
News October 28, 2025
திருவள்ளூர்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

திருவள்ளூர் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க


