News January 26, 2026
திருவள்ளூர்: மலிவு விலையில் பைக், கார் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் தேவைப்படுவோர் கலந்துகொள்ளலாம். தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 26, 2026
திருவள்ளுர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 26, 2026
திருத்தணி கோயிலுக்குச் செல்ல தடை!

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று(ஜன.25) பெய்த துாரல் மழையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்று(ஜன.26) முதல் மூன்று நாட்களுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்.1ஆம் தேதி தைப்பூசம் என்பதால், கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, அன்று ஒரு நாள் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கோயில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.
News January 26, 2026
திருவள்ளூர் கலெக்டர் கொடி ஏற்றினார்!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று(ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்


