News October 17, 2025
திருவள்ளூர்: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04175-236494)புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.’
Similar News
News October 29, 2025
திருவள்ளூரில் இன்று விடுமுறையா?

மோன்தா புயல் நள்ளிரவு 12.30 மணிக்கு ஆந்திராவில் கரையை கடந்தது. திருவள்ளூரில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்னும் மழை ஓயாத நிலையில், இன்று கல்லி நிலையங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 29, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
புயல் முன்னெச்சரிக்கை–மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக்.28) பாக்கம் பெரிய ஏரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் நீர்வரத்து தடையில்லாமல் இருக்க கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.


