News December 20, 2025
திருவள்ளூர்: மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.19) ‘மரக்கன்றுகள் நடும் விழா’ சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆட்சியர் மு.பிரதாப் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் வனத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News December 21, 2025
திருவள்ளூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
திருவள்ளூர்: 112 கிலோ குட்காவுடன் சிக்கிய வாலிபர்!

திருவள்ளூர்: அகரம் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மாரிமுத்து (32) என்பவருடைய கடையில் சோதனை செய்தனர். அப்போது, 12 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 75,000 ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
News December 21, 2025
திருத்தணி: பாழடைந்த குடியிருப்பில் மனித எலும்புக்கூடு!

திருத்தணி ரயில் நிலையம் அருகே, ஊழியர்கள் தங்குவதற்கு 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமல் பாழடைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக அங்கு யாரும் தாங்காத நிலையில், நேற்று அவ்வழியாக சென்ற இளைஞர்கள், ஒரு குடியிருப்பில் எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அது கொலையா என விசாரித்து வருகின்றனர்.


