News January 20, 2026
திருவள்ளூர்: மனைவி பிரிந்ததால் தற்கொலை!

பொதட்டூர்பேட்டை அடுத்த கீச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(35). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளு உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால், மன உளைச்சலடைந்த பிரசாத், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்று உயிரிழந்தார்.
Similar News
News January 24, 2026
திருவேற்காடு: மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு (23.01.2026) திருவேற்காடு சிந்தி கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சாலை விதிகள் மற்றும் விபத்தில்லா பயணம் குறித்து மாணவர்களுக்கும், பட்டாபிராம், எண்ணூர் தொழிற்சாலை பணியாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
News January 24, 2026
திருவள்ளூரில் இது நாம் ஆட்டம் 2026

திருவள்ளூர் மாவட்டத்தில் இது நாம் ஆட்டம் 2026 முதலமைச்சர் இளைஞர் அணி விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் குறித்த விவரங்கள் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்ய க்யூ ஆர் ஸ்கேன் செய்து பார்த்து கொள்ளாமல் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் மேல் உள்ள புகைப்படத்தில் உள்ளது.
News January 24, 2026
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த் தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான நவம்பர் மாதத்திற்கான குறைதீர் முகாம் நாளை (24ம் தேதி) நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்,புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை வரவேற்றகபடும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


