News September 15, 2024
திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் திடீர் மரணம்

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக பொருளாளராக பணியாற்றி வந்தவர் ஜாவித் அகமது (60). அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய நோய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் அதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றினார்.
Similar News
News September 10, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (10.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News September 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 10, 2025
திருவள்ளூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

திருவள்ளூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <