News March 19, 2024
திருவள்ளூர்: போதைப்பொருள்… தீவிர விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலகத்தில் நேற்று (மார்ச் 18) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. பின்னர் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான், கணக்காளர் ஷெரிப்பிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 29, 2025
திருவள்ளூர் போலீசார் அதிரடி!

மீஞ்சூர் அடுத்த சோழவரம் மொண்டியம்மன் நகர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த வாலிபரை விசாரித்ததில் அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அகில்(24) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 29, 2025
ஆவடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் நேற்று (டிச.28) வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 25-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டின் சொத்து வரிவிதிப்புகள் செலுத்த தவறியவர்களுக்கு செப்டம்பர்- மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு முதல், ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் விதிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம்.