News November 28, 2025

திருவள்ளூர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதுள்ள ரயில்வே ஊழியருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் தனது சொந்த மகளுக்கே அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவருக்கு 17 ஆண்டுகள் சிறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்க திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் பரிந்துரைத்தது.

Similar News

News November 29, 2025

கச்சூரில் இன்று “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்”

image

திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம் அடுத்த கச்சூரில்”நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” இன்று 29.11.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நடைபெற‌ உள்ளது. இதில் சிறப்பு மருத்துவ சேவைகள், மாற்றுத்திறனாளி‌சான்றிதழ்‌ இலவசமாக வழங்கபடவுள்ளன. இம்முகாமினை‌ ஏழை‌ எளிய‌ மக்கள் கலந்து கொண்டு ‌பயன்அடையுமாறு‌ அரசு‌ சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News November 29, 2025

திருவள்ளூர் கலெக்டர் வாக்காளர்களுக்கு அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் (நவ-29,30) ஆகிய இரு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது. எனவே இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 29, 2025

ஆட்சியாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட கடன் பத்திரம்!

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று (நவ.28) வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு மானிய விலை பயிர் கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!