News November 4, 2025

திருவள்ளூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

திருவள்ளூர்: உடல் துண்டாகி பெண் பலி!

image

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே.டி.ஜி நகரில் வசித்து வருபவர் தனசேகர். இவர் மனைவி புஷ்பா. இவர் கடைக்கு செல்வதற்காக செவ்வாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தை இன்று மாலை கடந்து சென்றுள்ளார். அப்போது சரக்கு ரயில் புஷ்பா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 5, 2025

வேப்பம்பட்டில் ஆய்வு செய்த ஆட்சியர் மு.பிரதாப்

image

திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் வேப்பம்பட்டில் ரூ.44 கோடியில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளை இன்று நவம்பர் 04 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்திரவிட்டார். உடன் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News November 5, 2025

ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!