News March 27, 2024
திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 10, 2025
திருவள்ளூர்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 10, 2025
போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் காந்திநகர் பகுதியில் போதை மாத்திரை வைத்திருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து சோதனை செய்த போது காந்திபுரம் பகுதியைச் சார்ந்த கமலக்கண்ணன் (22) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ய வைத்திருந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
News November 9, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (9.11.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.


