News January 31, 2026

திருவள்ளூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

Similar News

News February 16, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீட்டு மற்றும் திட்ட செயலாக்கத்தின் படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை(பிப்.17) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுமென மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.

News February 16, 2026

திருவள்ளூர்: பஸ் சக்கரத்தில் சிக்கி கொடூர பலி!

image

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(37). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெற்று(பிப்.15) தனது பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில், பஸ் சக்கரத்தில் சிக்கிய பாலாஜி, ரத்தவெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 16, 2026

திருத்தணியில் துடிதுடித்து பலி!

image

திருத்தணி நகராட்சி பாப்பிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் பாபு(40). இவருக்கு சத்யா(35) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று(பிப்.15) சிவராத்திரியை முன்னிட்டு திருத்தணி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். மேல் திருத்தணி பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி இவரது பைக் மீது மோதியதில், படுகாயமடைந்த சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!