News October 26, 2025

திருவள்ளூர்: பிரபல இன்ஸ்டா டான்சர் கைது!

image

திருவள்ளூரில் மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, சென்னையைச் சேர்ந்த ‘இன்ஸ்டாகிராம்’ பிரபல டான்சரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ஐபோன், 21 சிறிய ஜீப் லாக் கவர், ஒரு எடை மிஷின் உட்பட 33 பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னை ராமாபுரம், முல்லை நகரைச் சேர்ந்த சிபிராஜ், 22, என்பது தெரிய வந்தது. இவர், இன்ஸ்டாகிராம் பிரபல டான்சர் என்பதும் தெரியவந்தது.

Similar News

News January 26, 2026

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

image

பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் என திமுக எம்எல்ஏ கோ தளபதி பேசினார். இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ’கூட்டணியின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டியது அனைவரின் கடமை.” இதை கோ.தளபதி MLA புரிந்து நடந்து கொள்வார் என நம்புகிறேன் அவருடைய இந்த விமர்சனம் கடும் கண்டனத்திற்குரியது அதை உடனடியாக அவர் திரும்ப பெற வலியுறுத்தியுளார்.

News January 26, 2026

திருவள்ளூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

திருவள்ளூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

திருவள்ளூர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

திருவள்ளூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!