News May 7, 2024
திருவள்ளூர் பவானி அம்மன் கோயில் சிறப்பு!

திருவள்ளூர், பெரிய பாளையத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் கோயில். பாவனி அம்மன் கிருஷ்ணனின் தங்கையாக பாவிக்கப்படுகிறார். புராணக்கதையைக் கொண்ட இக்கோவிலில், சமீபத்தில் புரணமைக்கப்பட்டது. இதில் மாதங்கி அம்மனுக்கு தனிச்சன்னதியும் உள்ளது. அம்மன் கையில் சங்கு சக்கரம், வாள், அமிர்தக் கலசத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்திற்குள் அமைந்து அதன் அழகை அதிகரிக்கிறது.
Similar News
News July 6, 2025
திருவள்ளூரில் இன்று இலவச கண் சோதனை முகாம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனதில் அ.இ.அ.தி.மு.க சார்பில் (இன்று) கண் சோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் திருவள்ளூர் மாவட்ட வடக்கு கழக செயலாளர் மற்றும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம், பி.பலராமன் முகாமை துவக்கிவைத்தார். இந்த முகாம் காலை 9:00மணி முதல் 2:00மணி வரை, பொன்னேரி சின்னகாவனம் வள்ளலார் கோயில் அருகில் நடைபெறுகிறது. இதில் பயன்பெற அதிமுகவினர் அழைக்கின்றனர்.
News July 6, 2025
திருவள்ளூரில் வட்ட ரயில் இயக்க கோரிக்கை

திருவள்ளூர்: காஞ்சிபுரம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வட்ட பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் கோரிக்கை மனு வைத்துள்ளார். சென்ட்ரல் வழி தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர் மார்க்கமாக இயங்கி வந்த வட்ட பாதை ரயிலை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ரயில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
News July 6, 2025
திருவள்ளூர் இறைச்சி மார்க்கெட் விலை நிலவரம்

திருவள்ளூர் மார்கெட்டில் இன்று இறைச்சி விலை நிலவரம் (கிலோவில்): எலும்பில்லாத நாட்டு கோழி கிலோ ரூ.450, கோழிக்கறி கிலோ ரூ.240, ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய். 850, ஆட்டுத்தலை ரூபாய் 300, நாலு ஆட்டுக்கால்கள் ரூபாய் 400, மூளை ரூ.120, மண்ணீரல் ரூபாய் 200. பொன்னேரியில் சிக்கன் விலை கிலோ ரூபாய் 200 -க்கு விற்கப்படுகிறது.