News March 25, 2024
திருவள்ளூர்: பணத்துடன் சிக்கிய திமுக நிர்வாகிகள்

பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மீஞ்சூர் திமுக ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகியோரிடமிருந்து ₹500 நோட்டுகள் இருந்த திமுக தலைவரின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட கிஃப்ட் கவர்கள் மற்றும் ₹50000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கத் பல்வந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News February 3, 2026
ஆவடி இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ஆவடியில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
திருவள்ளூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 2, 2026
திருவள்ளூர்: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (04116 – 27664823) தொடர்பு கொள்ளலாம்.ஷேர்


