News October 6, 2025

திருவள்ளூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். *ஷேர் பண்ணுங்க*

Similar News

News October 7, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீஸ் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 6, 2025

திருவள்ளூர்: திருமணத்திற்கு தங்கம் வாங்க சூப்பர் திட்டம்

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்.

News October 6, 2025

திருத்தணி அருகே கோர விபத்து; 3 பேர் படுகாயம்

image

திருத்தணி வட்டம் தெக்களூர் அருகே நேற்று இரவு கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூன்று பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!