News April 26, 2024

திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில் சிறப்பு!

image

திருவள்ளூர், தேவி மீனாட்சிநகரில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில். இங்கு 2004ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர்சுவாமி சிலை உள்ளது. இந்த இடம் புராண காலத்தில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரத்தில் விமானமும், 15 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்சிநேயர் தோற்றம் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <>விண்ணப்பம்<<>>

News April 18, 2025

நலத்திட்ட உதவி வழங்குகிறார் முதல்வர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் அரசு விழாவில், 2 லட்சம் பேருக்கு ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ரூ.418 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். ரூ.390 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

News April 18, 2025

ATM கார்டுகளை மாற்றி கொடுத்து கொள்ளை

image

திருத்தணி – சித்தூர் சாலையில் உள்ள கமலா தியேட்டர் அருகே பாரத ஸ்டேட் வங்கி ATM மையத்தில், நேற்று (ஏப்ரல் 17) ஒருவர் தில்லு முல்லு செய்து பணம் திருட முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திராவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், பணம் எடுக்க வருவோரிடம் ATM கார்டை மாற்றி கொடுத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!