News November 9, 2025

திருவள்ளூர் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

image

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு (09.11.2025) ஆவடி காவல் ஆணையகத்தில் நடைபெற உள்ளது. 2118 நபர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வர்கள் காலை 8.00 முதல் 9.30 மணிக்குள் நுழைய வேண்டும். ஹால் டிக்கெட், அரசின் அடையாள அட்டை கொண்டுவர அனுமதி. மொபைல், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தடை என ஆவடி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

திருவள்ளூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

திருத்தணி அருகே நில தகராறு 5-பேர் காயம்

image

திருத்தணி தாழவேடு முனிகன்னைய்யா40 வேலு58 உறவினர்களான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. (நவ.08) வேலு தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரின் ஆதரவாளர்கள் கத்தி உருட்டு கட்டை தாக்கி கொண்டதில், வேலு,சுமதி, ரமேஷ்,முனிகன்னைய்யா, டில்லிபாபு 5பேருக்கு தலை, கை பகுதியில் காயம் ஏற்பட்டு.திருத்தணிGH சேர்க்கபட்டு 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 9, 2025

ஆவடியில் துணை முதலமைச்சர் வருகை.

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வருகின்ற (24.11.2025) திங்கட்கிழமை அன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார் என்று அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. இதையடுத்து அதற்கான அரசு பணிகள் நடந்து வருகிறது.

error: Content is protected !!