News June 4, 2024
திருவள்ளூர்: தேர்தலில் சாதித்த ஐஏஎஸ்… யார் இவர்?

பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் முடிவு வெளிவந்த வண்ணம் உள்ளது. திருவள்ளூரில் காங். சார்பில் போட்டியிட்ட Ex ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அபார வெற்றியை நோக்கி உள்ளார். கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தேசத்தை காக்க அரசியலில் குதித்தார். ஹிஜாப், ஊழல், முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து என பல்வேறு பிரச்சனைகளில் தனது குரலை அழுத்தமாக பதிவுசெய்தவர். தற்போது ராகுலின் ‘கை’க்கு பலம் சேர்த்துள்ளார்.
Similar News
News July 7, 2025
பூட்டை உடைத்து ரூ.20,000 திருட்டு

எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 47. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வீடு திரும்பிய சீதாலட்சுமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த புது துணிகள், 20,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
திருவள்ளூரில் பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.