News June 10, 2024
திருவள்ளூர்: தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகன்

திருத்தணி அடுத்த இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் அசின் மும்தாஜ். இவரது மகன் பாஷா தனது தாயிடம், வியாபாரம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது; தனக்கு கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மும்தாஜ் தன்னால் கடன் வாங்கி தர முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த பாஷா நேற்று உருட்டு கட்டையால் மும்தாஜ் தலையில் தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த மும்தாஜ் மயங்கி விழுந்தார். பாஷாவை போலீசார் தேடிவருகின்றனர்.
Similar News
News July 8, 2025
விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

2025 2026 ஆம் ஆண்டு நலிந்த நிலையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஜூலை 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில்7401703482 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News July 8, 2025
மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்க அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 20.10.2016 க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரைமுறை செய்து கொடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அறிக்கை மூலமாக தெரிவித்தார். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
News July 8, 2025
முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரர்/சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக குறைபாடுகள்/சிரமங்கள் SPARSH இணையதளத்தில் ஏதேனும் இருப்பின் அதனை களைந்திடும் பொருட்டு கண்ட்ரோலர் ஒப்பி டேபின்ஸ் அக்கௌன்த்ஸ் தேனாம்பேட்டை திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் ஜூலை 9,10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.