News September 4, 2025
திருவள்ளூர்: தந்தையை வெட்டி கொன்ற மகன்

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ளது பனப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் அருள் தாஸ் என்கிற குட்டி (வயது 50). இவருடைய மகன் ஜஸ்டின் (வயது 25). இன்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக குடி போதையில் இருந்த ஜஸ்டின் திடீரென வீட்டில் இருந்த கத்தி எடுத்து தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மாநில விருது பெரும் ஆசிரியர்கள்

நாளை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது திருவள்ளூர் டிஆர்பிசிசி பள்ளி ஆசிரியை வரலட்சுமி கடம்பத்தூர் ஓவிய ஆசிரியர் அருணன், புழல் லலிதா பூந்தமல்லி புஷ்பலதா, திருவாலங்காடு முதுகலை ஆசிரியர் ஏழுமலை, கும்மிடிப்பூண்டி சண்முகம் உட்பட 13 ஆசிரியர்கள் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து விருது பெற உள்ளார்கள்
News September 4, 2025
திருவள்ளூர்: உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை.

மோரையைச் சேர்ந்த டி.செல்லப்பன் என்பவர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ததால், அவருக்கு அரசு மரியையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.
News September 4, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.