News December 12, 2025

திருவள்ளூர்: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

Similar News

News December 12, 2025

திருவள்ளூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

திருவள்ளூர்: மூலக்கடையில் 15 வயது சிறுமி, நேற்று (டிச.11) புழல் பகுதி உறவினர் வீடு சென்று தன் வீடு செல்ல புழலில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி மூலக்கடை செல்வதாக டிரைவர் கூறவே நம்பி சிறுமி லாரியில் ஏறினார். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி சிறுமியை லாரியில் அந்த டிரைவர் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

News December 12, 2025

திருவள்ளூர்: மணமகளுக்கு ரூ.25,000 சூப்பர் திட்டம்!

image

திருவள்ளூர் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

News December 12, 2025

பொன்னேரி: முடிதிருத்தம் தொழிலார்கள் முற்றுகை

image

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் அடாவடி வசூல் செய்வதாகவும், தொழில் வரி வசூல் செய்வதில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதாகவும் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(டிச்.12) 50க்கும் மேற்பட்டோர் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

error: Content is protected !!