News August 10, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும், அரசு வேலை!

image

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 13, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 12, 2025

பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்த நபர் கைது

image

பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்தும், நகைகளைப் பறித்தும் சென்ற வழக்கில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அஜய்குமார், கொள்ளையடித்த நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News August 12, 2025

திருவள்ளூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 409 மனுக்கள்!

image

திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் நிலம் தொடர்பாக 51 மனுக்கள் சமூக பாதுகாப்பு திட்டம்-54, வேலைவாய்ப்பு-58, பசுமை வீடு, அடிப்படை வசதி-87 & இதரதுறை-159 என மொத்தம் 409 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!