News January 3, 2026
திருவள்ளூர்: டிகிரி இருந்தால் வங்கியில் வேலை- CLICK HERE

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.10. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 25, 2026
திருவள்ளுர்: செல்போன் பயணிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
திருவள்ளுர்: வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி!

பெரியபாளையம் பகுதியில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் வாலிபர் மற்றும் பெயிண்டர் என இருவர் உயிரிழந்தனர். காய்கறி சந்தைக்குச் சென்ற புகழேந்தி (22) லாரி மோதியும், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெயிண்டர் சாமிநாதன் (38) சரக்கு வேன் மோதியும் பலியாகினர். காயமடைந்த குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய ஓட்டுநர்களைப் பெரியபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
News January 25, 2026
திருவள்ளூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

செங்குன்றம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த கேரள இளைஞர் சந்தீப் (33), குடும்பப் பிரச்சினை காரணமாக நேற்று மாலை இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், அவர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


