News August 14, 2025
திருவள்ளூர்: சொந்த ஊரில் வங்கி வேலை!

திருவள்ளூர் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் <
Similar News
News August 14, 2025
திருவள்ளூர்: ஆம்னி பஸ்ல அதிக கட்டணமா? கவலை வேண்டாம்

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், விடுமுறை நாட்களில் இது தொடர்கதையாக உள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆடி கிருத்திகை முன்னிட்டு அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே தெற்கு ரயில்வே இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கும் இயக்கப்படும். இது பக்தர்களுக்கு வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 14, 2025
திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <