News October 22, 2025

திருவள்ளூர்: செம்பரம்பாக்கத்தில் நீர் வரத்து கிடுகிடு உயர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1,800 கன அடியில் இருந்து தற்போது 2,170 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் 24 அடி நீர்மட்டத்தில் தற்போது 20.84 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. 3.64 TMC கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 TMC நீர் இருப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையாக 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Similar News

News October 22, 2025

மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

திருவள்ளூர் கலெக்டர் கூட்ட அரங்கில் அக்.31-ம் தேதி மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் மூலமாக தங்களது கோரிக்கைகளை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News October 22, 2025

திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

image

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவார்பாடி ரயில்வே சரங்கப்பாதை அருகே மழைநீர் வெளியேற்றும் பணிகள் இன்று (அக். 22) நடைபெற்றது. இப்பணிகள் குறித்து கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News October 22, 2025

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ‘RED ALERT’

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!