News September 27, 2025
திருவள்ளூர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News January 22, 2026
திருவள்ளூரில் தடுக்கி விழுந்து சாவு!

பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் பழனி(58). கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளிப்பட்டு பஜார் தெருவில் நடந்து சென்ற போது, கல் தடுக்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 22, 2026
கும்மிடிப்பூண்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பலமுறை இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதையடுத்து, அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், அச்சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து அதிகாரிகளின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


