News September 3, 2025
திருவள்ளூர்: சிறுமி பாலியல் வழக்கில் 26 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2022ம் ஆண்டு கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (செப்.2), ரமேஷ் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ரூ. 26,000 அபராதம் மற்றும் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
Similar News
News September 4, 2025
திருவள்ளூர்: 10th பாஸ் போதும்; 108 ஆம்புலன்சில் வேலை

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. ஓட்டுநர் SSLC தேர்ச்சி பெற்று , பேட்ச் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். (சம்பளம் ரூ.21,120) மருத்துவ பணியாளர் நர்சிங் முடித்திருக்க வேண்டும்.(சம்பளம் ரூ.21,320). இதற்கான நேர்முக தேர்வு வரும் செப்.7 ம் தேதி ஈக்காட்டுதாங்களில் உள்ள BDO அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
News September 4, 2025
திருவள்ளூர்: 1,794 பேருக்கு வேலை.. ரூ.59,000 வரை சம்பளம்

▶️தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ▶️இதற்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணப்பிக்க 02.10.25 கடைசி ஆகும். ▶️இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News September 4, 2025
திருவள்ளூர் அருகே குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் சுபாஷினி, 1 வயதில் ஜெய்கிருஷ் என்ற குழந்தைகள். இந்நிலையில் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஜெய்கிருஷ், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.