News September 19, 2025
திருவள்ளூர்: சிறுமியை சீரழித்த தந்தைக்கு அதிரடி தீர்ப்பு

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்தநிலையில் நேற்று 18.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 21 ஆண்டு கால கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.30,000அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Similar News
News September 19, 2025
திருவள்ளூர்: மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மூதாட்டி பலி

ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் குரு வயல் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சம்மந்தன். இவரது மனைவி மல்லிகா(60). இருவரும் தங்களது விவசாய நிலத்தில் சுற்றிப் பார்வையிட்டு நேற்று (செப்டம்பர் 18) மாலை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாலை கனமழை பெய்து மின்னல் தாக்கியதில் மூதாட்டி மல்லிகா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 19, 2025
திருவள்ளூர்: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

திருவள்ளூர், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.
News September 19, 2025
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!