News January 6, 2026
திருவள்ளூர்: சிறுமிக்கு காதல் வலை வீசி வன்கொடுமை!

விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, 15 வயது சிறுமிக்கு காதல் வலை வீசி, அவரிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.65 ஆயிரம் அபராதம், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Similar News
News January 29, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பொன்னேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு கணவருடன் சென்றபோது துப்பட்டா சக்கரத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணின் தலையில் பின்னால் வந்த வாகனம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி கிராமத்தில் நேரிட்ட விபத்தில் உயிரந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிராத பரிசோதனைக்கு சத்யவேடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 29, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

ஈக்காடு, சம்பத் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டராஜன். இவரது மகன் சரவணகணேஷ்(24). சார்டர்ட் அக்கவுண்ட் படித்து வந்த இவர், படிப்பின் அழுத்தம் காரணமாக சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல அறிந்து விஐந்த புல்லரம்பாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 29, 2026
திருத்தணி அருகே பெண் தற்கொலை!

திருவள்ளூர்: திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி லதா(35). நேற்று முன் தினம் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரம், பூச்சி மருந்தை அருந்தி மயங்கினார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தும் பலனின்றி நேற்று(ஜன.28) உயிரிழந்தார்.


