News March 8, 2025
திருவள்ளூர் கோர விபத்து: லாரி ஓட்டுநர் கைது

கே.ஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டதில் பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 38க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540105>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க
News August 28, 2025
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் சிறுமி வழக்கில் குண்டாஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் ராஜு பிஸ்வ கர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நேற்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.