News March 28, 2024
திருவள்ளூர்: கொலை… நாயால் சிக்கிய குற்றவாளி!

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்த நிலையில், பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்தது போலீஸ் மோப்ப நாய் டாபி என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 18, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

ஆந்திராவில் இருந்து சிலர் பைக்கில் உத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஒரு பைக்கை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முஷரப்(26), சுகுமார்(35) என்பதும், 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர்.
News February 18, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கம்மவார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(35). இவருக்கு கீர்த்தனா(28) என்ற மனைவியும் 4 வயதில் ஓர் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 18, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பாலாஜி(25). இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்.15ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயார் மேனகா இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


