News March 26, 2025
திருவள்ளூர்: கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வித்துறையின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Pre-KG, UKG ஆகிய வகுப்புகள் உட்பட முதலாம் வகுப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 7-ம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிந்தது. மேலும் மீதம் உள்ள இடங்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது .
Similar News
News March 29, 2025
சனி பகவான் மகனின் தோஷம் நீக்கிய அற்புத தலம்

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க
News March 29, 2025
திருவள்ளூரில் 402 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் 144 மையங்களில் 32,029 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். 402 பேர் தேர்வுக்கு வரவில்லை. அனைத்து மையங்களிலும் மூல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 10ஆம் வகுப்பு தேர்வு 15-ம் தேதி வரை நடைபெறும்.
News March 29, 2025
மத்திய அரசில் வேலை வாய்ப்பு

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி 10th ,12th தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். ரூ.25,500 – 81.100 வரை சம்பளம் , விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 24குள் இந்த லிங்கை <