News October 24, 2024
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பல நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் யாரேனும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு முன் பணம் செலுத்தும்படி தெரிவித்தால் உடனடியாக அந்நபரை குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Similar News
News December 28, 2025
திருவள்ளூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
திருவள்ளூர்: மின்சார ரயில்கள் ரத்து!

மீஞ்சூர் – அத்திபட்டு ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் இருந்து இன்று (டிச.28) காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும், கும்மி..,-யில் இருந்து காலை 9.55, 11.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும், கடற்கரை – கும்மி.., நாளை காலை 9.40 கும்மி.., – கடற்., வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
News December 28, 2025
திருவள்ளூர்: ஆசையாக வாங்கிய பைக் எமனாக மாறியது!

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் மற்றும் நிர்மல் குமார். நண்பர்களான இருவரும் நேற்று பாரிவாக்கம் பகுதியில் டீ குடிப்பதற்காக தனது புதிய பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது மோதியதில் இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


