News December 1, 2025
திருவள்ளூர்: காதல் திருமணம்-மாப்பிளையை பொளந்த பெற்றோர்!

அரக்கோணத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் முடித்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மணமகனின் தாயார், மாற்று சமூகப் பெண்ணை மணந்த ஆத்திரத்தில், மனைவியின் கண்முன்னே மகனை சரமாரியாகத் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 1, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (30.11.2025) இரவு இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 30, 2025
திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (01.12.2025) கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாவதால் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குடியிருப்போர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரைகளில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.