News March 24, 2024
திருவள்ளூர்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
Similar News
News April 5, 2025
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டம் 1.1.1997-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. முதல் கலெக்டராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் (புகைப்படம்) 1.1.1997 அன்று பதவி ஏற்றார். அவரை சேர்த்து தற்போது வரை மாவட்டத்தில் 23 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 3 பெண்கள், 20 ஆண்கள். 23 ஆவது கலெக்டராக மு.பிரதாப் 04.02.2025 அன்று பதிவியேற்றார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
News April 5, 2025
திருவள்ளூரில் பறந்த அதிரடி உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில், மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். முதன்மையாக தமிழ், இரண்டாவது ஆங்கிலம், தேவையானால் மூன்றாவது மொழியில் எழுதலாம். மறுப்பவர்களுக்கு 1947-ன் சட்ட விதியின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *கடை வைத்திருக்கும் நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பகிரவும்*
News April 5, 2025
டீம் லீடர் பணிக்கு வேலைவாய்ப்பு

திருவள்ளுர் ஆதித்யா பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டீம் லீடர் பணிக்கு வேலை வாய்ப்பு. இவ்வேலைக்கு உயர்கல்வி (12வகுப்பு) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<