News October 22, 2025

திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

image

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவார்பாடி ரயில்வே சரங்கப்பாதை அருகே மழைநீர் வெளியேற்றும் பணிகள் இன்று (அக். 22) நடைபெற்றது. இப்பணிகள் குறித்து கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News February 16, 2026

திருவள்ளூர்: கேஸ் மானியம் ரூ.300 வரலையா..?

image

திருவள்ளூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். *இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க*

News February 16, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீட்டு மற்றும் திட்ட செயலாக்கத்தின் படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை(பிப்.17) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுமென மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.

News February 16, 2026

திருவள்ளூர்: பஸ் சக்கரத்தில் சிக்கி கொடூர பலி!

image

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(37). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெற்று(பிப்.15) தனது பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில், பஸ் சக்கரத்தில் சிக்கிய பாலாஜி, ரத்தவெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!