News January 7, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர்: பொங்கல் பரிசுத் தொகுபு வரும் ஜன.8ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். டோக்கன் பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 7338749105 என்ற எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

திருவள்ளூரில் எலக்ட்ரிக் ரயில் இயங்காது!

image

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை செண்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று(ஜன.8) காலை செண்ட்ரலில் இருந்து 10:30 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து 10:55 மனிக்கு சென்னைகடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

தேவிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின்(81). இவர் ஐ.சி.எம்.ஆர் என்கிற மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன் தினம் தனது மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் படுகாயமடைந்த அவரை , அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு போரூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 8, 2026

திருவள்ளூரில் தீயில் கருகி பலி!

image

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(75). தனிய வசித்து வந்த இவர், கடந்த டிச.29ஆம் தேதி நள்ளிரவில் குளிர் காய பழைய காகிதங்களை எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றுவந்தவர், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.

error: Content is protected !!