News November 1, 2025
திருவள்ளூர்: கரை ஒதுங்கிய 4 உடல்கள்… உதவி கரம் நீட்டிய CM

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தேவகி, காயத்ரி, பவானி, ஷாலினி ஆகிய நான்கு பேரும் நேற்று எண்ணூர் கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது நான்கு பேரும் அலையில் சிக்கி மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு பேரும் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்ததோடு, நான்கு பேரும் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (1.11.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளாம்.
News November 1, 2025
எண்ணூர் கடலில் மூழ்கி பலி – எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த தேவகி, காயத்ரி, பவானி, ஷாலினி ஆகியோர் இன்று (01.11.2025) சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. கும்மிடிப்பூண்டி MLA டி.ஜே. கோவிந்தராஜன் மருத்துவர்களிடம் விரைவாக பிரேதப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
News November 1, 2025
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.81 லட்சம் வருவாய்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 73 நாட்களில் பக்தர்களிடமிருந்து ரூ.81,71,715 வருவாய் வசூலாகியுள்ளது. 89 கிலோ தங்கம், 5 கிலோ 903 கிராம் வெள்ளி போன்ற நன்கொடைகளும் கிடைத்துள்ளன. இந்த வருவாய், கோவில் பராமரிப்பு மற்றும் தேவாலய பணிகளுக்காக பயன்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


