News May 20, 2024
திருவள்ளூர்: கணவன்-மனைவி பரிதாப பலி!

ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் மெய்யழகன் (55). இவர், திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த அவரது மனைவி லட்சுமி, அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 21, 2025
திருவள்ளூர்: வட மாநில தொழிலாளி பரிதாப பலி!

கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கட்டட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் கான்(27) என்பவர் நேற்று(நவ.20) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.