News December 22, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் யாகூப்(23). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களோடு ஏரியில் குளிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு, மூழ்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

திருவள்ளூரில் நாளை வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

image

நாளை திருவள்ளூரில் தீபம் கண் மருத்துவமனை எதிரே ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது நாளை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் ஒற்றுக் கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளார்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது அதற்கான ஆயத்த மாநாடு நாளை நடைபெற உள்ளது

News December 26, 2025

திருவள்ளூர் இலவச சட்ட உதவி மைய எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு பகிருங்கள்*

News December 26, 2025

திருவள்ளூர்: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!