News January 10, 2026

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா..?

image

திருவள்ளூர் மக்களே.., ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.( SHARE NOW)

Similar News

News January 30, 2026

உலக தொழுநோய் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு முகாம்

image

திருவள்ளூர் பெரியகுப்பம் ஜே.என் சாலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் இன்று (ஜன.30) உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் 35 மருத்துவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மருத்துவ கல்லூரி முதல்வர், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.

News January 30, 2026

திருவள்ளூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

கொடியசைத்து வழி அனுப்பி வைத்த ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விபத்து தடுப்பு தொடர்பாக பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தினை பார்வையிட்டு, கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

error: Content is protected !!