News February 17, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
Similar News
News February 20, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கவரைப்பேட்டை அடுத்த பெரியபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் சென்றார். இந்நிலையில். கெட்ணமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்த அஜித், படுகாயமடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புழல் சிறையில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை கைதியாக உள்ள ரங்கநாதன் (78) என்பவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், சிறையில் பரபரப்பு நிலவியது.