News July 22, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்.

image

திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் பரமசிவம், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பூபாலன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சுரேஷ், கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் பாலு ஆகியோர் இன்று (ஜூலை-22) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையில் வேலை!

image

திருவள்ளூர், மாவட்ட சுகாதார துறையின் கீழ் செவிலியர், லேப் டெக்னீசியன் & IT Coordinator பணியிடங்களுக்கு 84 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நர்சிங், DMLT & B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 11, 2025

திருவள்ளூர்: கணவன் மீது எண்ணெயை ஊற்றிய மனைவி!

image

புழல், லட்சுமிபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் நிலோபர் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். காதர் பாஷா தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் இருப்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நிலோபர் நிஷா, காதர் பாஷா மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 11, 2025

மனைவி கண்முன்னே கணவர் விபத்தில் பலி

image

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற குமார் – சுதா தம்பதி விபத்தில் சிக்கியதில் குமார் உயிரிழந்தார். ஸ்கூட்டரை இயக்கும்போது மனைவி சுதாவிடம் பேசியபடியே சென்றதால் கவனம் சிதறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மீதி மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் மனைவி சுதா கண் முன்னே குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!