News September 20, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து பணி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
Similar News
News September 19, 2025
பாஜக நிர்வாகி மீது தாக்குதல்; பணம் பைக் பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே முன் விரோதம் காரணமாக பாஜக பட்டியல் அணி மாவட்ட செயற்கு உறுப்பினர் நடராஜனை ரஞ்சித் என்பவர் மது போதையில் தாக்கி முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றார். இது குறித்து காயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புகாரின் பெயரில் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.
News September 19, 2025
தூய்மை மிஷன் 2.0 திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், மேல்மணம்பேடு ஊராட்சியில், இன்று காலை 10.30 மணி அளவில், தூய்மை MISSION 2.O திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தை அமைச்சர் ஆவடி நாசர் நேரில் சென்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
News September 19, 2025
திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் அடையாளம் தெரியாத நபர்கள் உங்களை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்களை கேட்டால் யாரும் தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.