News September 5, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
Similar News
News September 5, 2025
திருவள்ளூர் மக்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (99411 99363) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 5, 2025
பூந்தமல்லியில் நூதன பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு

பூந்தமல்லியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நகராட்சி சார்பில் நடைபெற்றது. இதனை விட்டு ஆடு மாடு ஆகியவற்றின் கழுத்தில் எங்களையும் வாழ விடுங்கள் என்ற பதாகை கட்டப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சரவணகுமார், வட்டார சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர்.
News September 5, 2025
திருவள்ளூரில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரலட்சுமி, அருணன், ஏழுமலை, குமாரி, பவானி, நாகேந்திரன், வனிதா, புஷ்பலதா, ஆனந்த், ஹெலன் நிர்மலா, சண்முகம், மேரி, செல்வி, ஆகிய 13 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.