News August 11, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News August 11, 2025

மனைவி கண்முன்னே கணவர் விபத்தில் பலி

image

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற குமார் – சுதா தம்பதி விபத்தில் சிக்கியதில் குமார் உயிரிழந்தார். ஸ்கூட்டரை இயக்கும்போது மனைவி சுதாவிடம் பேசியபடியே சென்றதால் கவனம் சிதறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மீதி மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் மனைவி சுதா கண் முன்னே குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News August 10, 2025

திருவள்ளூரில் நோய்களைத் தீர்க்கும் வீரராகவர்

image

திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான வீரராகவப் பெருமாள், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் “வைத்தியர்” என்று அழைக்கப்படுகிறார். இங்கு வழங்கப்படும் நெய், பால் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் பிரசாதத்தை உட்கொண்டால், உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!

News August 10, 2025

திருவள்ளூர்: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9543773337, 9360221280 எண்ணை அழைக்கவும். இப்பயிற்சி முடித்தால் வங்கிகளில் வேலை, நகைக்கடை, நகை அடகு கடை வைப்பது போன்ற தொழில்களுக்கு உதவியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!