News July 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News July 10, 2025
திருவள்ளூர் பகுதிகளில் நாளைய மின்தடை

வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துார், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை காலை, 9: 00 மணி முதல் மாலை, 5: 00 மணி வரை மின்தடை செய்யப்படும்.
News July 10, 2025
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.58 வயதை கடந்த, மாத வருமானம் ₹6,000-ஐ மீறாத, தேசிய/சர்வதேச போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஜூலை 31க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார் .
News July 10, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 1,100 கட்டுமான தொழிலாளர்களுக்கு கார்பென்டர், தச்சு, மின் பணியாளர் உள்ளிட்ட 12 தொழில்களில் 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பயிற்சிக்காலத்தில் ரூ.800 ஊதியம், இலவச உணவு மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். விரும்புவோர் தொழிலார் நலவாரியத்தை அணுகலாம்.