News November 4, 2025
திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (3.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News November 4, 2025
திருவள்ளூர்: வீட்டுமனைகள் ரத்து செய்ய திட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டுமனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், வீடுகள் கட்டாதவர்கள் குறித்து கணக்கெடுத்து, விரைவில் வீடுகள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுவர். தவறும்பட்சத்தில், வீட்டுமனைகள் ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
News November 4, 2025
திருவள்ளூர்: 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்தவர் ராகுல் இவரது மனைவி சபர்மதி, நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சபர்மதிக்கு பிரசவ வலி அதிகரித்தால் உதவியாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்தனர். அப்போது சபர்மதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இதனை தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
News November 4, 2025
செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்தின் பிரிவு போலீசார் நேற்று (03.11.2025) செங்குன்றம் பகுதியில் நடத்திய சோதனையில் 10.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவரை கைது செய்து, விசாரணைக்காக நீதிமன்ற காவலில் ஒப்படைத்துள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பில் ஆவடி காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


